தமிழகம் முழுவதும் போலீஸின் பக்கா ஸ்கெட்ச்... லிஸ்ட்டில் யார் யார்? மரண பீதியில் ரவுடிகள்

x

தமிழக காவல்துறையில் ரௌடிகளை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை ரவுடிகளை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டுள்ளது...

வயதான சில ரவுடிகள் குற்றச்செயல்களில் ஈடுபடாத காரணத்தினால், அவர்களின் சரித்திர பதிவேடு முடித்து வைக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது

சிறையிலும், சிறையை விட்டு வெளியேறிய பின்னும் ரவுடிகளை, உளவுத்துறை மூலமாக கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளனர்

தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் ரவுடிகளை கண்காணிப்பதில் நிலையான செயல் அறிக்கை உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்

ரவுடிகளுக்கிடையே இருக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்காணித்து, மோதல் போக்கை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ரவுடிகளுக்கு கிடைக்கும் பொருளாதார ரீதியான உதவிகளை தடை செய்வது குறித்து விரிவான திட்டமிடல் அமலாகவுள்ளது

ரவுடிகளின் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை உளவுத்துறை மூலம் நெருக்கமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

ரவுடிகளின் கொட்டங்களை அடக்க காவல்துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இவை எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்