அதிர வைத்த `கைரேகை'... நிலைகுலைய வைத்த `தீரன் கேங்' - TN போலீசின் திக் திக் அட்வெஞ்சர்

x

தீரன் அதிகாரம் பட பாணியில் அரியானா சென்று கொள்ளையனை பிடித்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

90களில் தமிழகத்தை அதிர வைத்த பவாரியா கொள்ளையர்கள்

90களில் நடந்த கொடூர கொலைகளும் அதனை நடத்திய பவாரியா கொள்ளையர்களையும் தமிழக மக்களும் காவல்துறையும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.

இவர்களை என்கவுன்ட்டர் செய்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான் தீரன் அதிகாரம் திரைப்படம். அதில் பவாரியா கொள்ளையர்களை பிடிக்கத் தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்ட சிரமங்கள் தெளிவாக கூறப்பட்டிருக்கும்..

கிட்டத்தட்ட படத்தில் காட்டப்பட்ட சம்பவங்களை மிஞ்சும் வகையில் நடந்து இருக்கிறது தற்போதைய சம்பவம்...

சென்னையில் சுவற்றை துளையிட்டுக் கொள்ளையடித்த கும்பல்

சென்னை மேற்கு தாம்பரத்தில் செல்போன் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தவர் தமிமுன் அன்சாரி. கடந்த மார்ச் மாதம் இவரது கடையின் சுவரை உடைத்து ஓட்டை போட்டு சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல் அடுத்த உள்ள கடையின் சுவரையும் உடைத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கைரேகை அதிர்ச்சியை ஏற்படுத்து இருக்கிறது.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன் சேலையூரில்

நகைக்கடையின் சுவரை உடைத்து ஒட்டை போட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முகம்மது அலி எனத் தெரியவந்துள்ளது.

கொள்ளையன் தாக்கியதில் நிலைகுலைந்த தனிப்படை போலீசார்

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேசம் சென்ற முகம்மது அலியை நெருக்கிய நேரத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்ததால் படுகாயத்துடன் சென்னைக்கு திரும்பினர் தனிப்படை போலீசார்.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையன் அரியானா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் இர்பான் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரியானா சென்ற தனிப்படை போலீசார் நள்ளிரவு நேரத்தில் இர்பானை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து இருக்கின்றனர்.

அரியானாவில் தமிழக போலீசாரை சூழ்ந்த கும்பலால் பதற்றம்

அப்போது தீரன் அதிகாரம் படப் பாணியில் இர்பானின் உறவினர்கள் கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இர்பானின் உறவினர்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டதால் நிலைமை பதற்றத்திற்குள்ளானது.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் இர்பானை கூட்டத்திலிருந்து தப்பிவிடாதவாறு கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் உடனடியாக விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் காஞ்சிபுரத்தில் செல்போன் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்ற இர்பான், சிறையில் முகம்மது அலியை சந்தித்து இருக்கிறார். அதன் பின்னர் தான் தாம்பரம் கொள்ளை திட்டத்தை கச்சிதமாக திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் இர்பானை கூட்டத்திலிருந்து தப்பிவிடாதவாறு கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் உடனடியாக விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் காஞ்சிபுரத்தில் செல்போன் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்ற இர்பான், சிறையில் முகம்மது அலியை சந்தித்து இருக்கிறார். அதன் பின்னர் தான் தாம்பரம் கொள்ளை திட்டத்தை கச்சிதமாக திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்