``ரூ10ஆயிரம் கோடி''... இந்தியர்களை அடிமையாக்கிய... எதிராக திசைதிருப்பிய அதிர்ச்சி... போலீசார் பகீர் தகவல்

x

வெளிநாடுகளில் சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கி இருந்த 186 பேரை மீட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கி தவித்து வருகின்றனர்.

அதிக சம்பளம் தருவதாக அழைக்கும் கும்பல், அவர்கள் வெளிநாடு சென்ற பிறகு இணையவழி குற்றங்களை செய்வதற்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

மறுப்பு தெரிவிப்பவர்களை மின்சாரத் தாக்குதல் கொடுப்பது, பட்டினி போடுவது போன்ற கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 188 கோடி ரூபாய் பணத்தை அந்த கும்பல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், சென்னை, சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, அரியலூர், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து வேலைக்குச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக, 9 வழக்குகளை பதிவு செய்து, 10 இடைத்தரகர்களை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 285 பேர் சென்றிருப்பதாக கிடைத்திருக்கும் தகவலின் பேரில் அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. லாவோஸ், கம்போடியா நாடுகளில் இருந்து இதுவரை 186 பேர் மீட்கப்பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்