"இனி ED-யிடம் கொடுக்க எதுவுமில்லை" - சுப்ரீம் கோர்ட்டில் அதிர்வை கிளப்பிய தமிழக அரசு
"இனி ED-யிடம் கொடுக்க எதுவுமில்லை" - சுப்ரீம் கோர்ட்டில் அதிர்வை கிளப்பிய தமிழக அரசு
தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா. எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜரான நிலையில், சட்டவிரோத மணல் விற்பனை புகார் தொடர்பான ஆவணங்கள், புகார் விவரம் என அனைத்தையும் அமலாக்கத் துறையிடம் கொடுத்துவிட்டதாகவும், இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை எனவும் வாதிட்டுள்ளனர். வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
Next Story