ஒரேநேரத்தில்... மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேருக்கு நேர்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

x

சென்னை தலைமை செயலகத்தில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில்

முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் குறித்தும், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்