வேலை வாய்ப்பு... இளைஞர்கள் கவனத்திற்கு..! RTI மூலம் வெளியான முக்கிய தகவல்

x

தமிழகத்தில் கடந்த மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 47.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதம் 7.8 சதவீதம் ஆக இருந்தது. தமிழகத்தில் இது 3.9 சதவீதம் ஆக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில், கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி,

21 லட்சத்து 74 ஆயிரத்து 48 ஆண்கள் மற்றும் 25 லட்சத்து 76 ஆயிரத்து 4 பெண்கள் என மொத்தம் 48 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் விண்ணப்பித்து பெற்ற தகவலில், இது தெரிய வந்துள்ளது

வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தவர்களில், ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 56 ஆயிரத்து 897 பேர், வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்