"அற்பமாக அப்பீல்.. தமிழக அரசு விளையாடுவதா?'' - ஐகோர்ட் மதுரை பெஞ்ச் காட்டம்
கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு சம்பள விவகாரத்தில் அற்பமாக மேல்முறையீடு செய்து தமிழக அரசு விளையாடுவதா? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. திருநெல்வேலி சாரா டக்கர் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழக அரசு தனது குடிமக்கள் மீதான படுமோசமான விளையாட்டின் விளைவாக எழும் அற்பமான முறையீடுகள் இவை எனக் கூறியது. ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதிகள், 25 ஆயிரம் ரூபாய் உதவி பேராசிரியர்களுக்கும், மீதம் உள்ள 25 ஆயிரம் ரூபாய் சென்னை அடையாறு கேன்கேர் அறக்கட்டளைக்கும் வழங்க உத்தரவிட்டனர்.
Next Story