அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில், அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதியின் நலனை பாதுகாக்க, புலன் விசாரணை அதிகாரியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும், அதனால் இரு வழக்குகளையும் நடத்த அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்