``விரைவில்..'' - அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை | Anbumani | PMK

x

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு தேவையான விதைகள், உரம் மற்றும் பயிர்க்கடனை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், மேட்டூர் அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்