அரசுக்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
அரசுக் கல்லூரிகளில் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை தாமதமாகும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்திலும், பாரதியார் பல்கலைக் கழகத்திலும், இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதால், முதுநிலை மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும், தாமதத்தை தவிர்ப்பதற்கு, கல்லூரிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ள கல்வி ஆண்டிற்கான கால அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் கடைப்பிடிக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story