"ரூ.50 கோடியில் பள்ளி, கல்லூரிகளில்..." - பேரவையில் அமைச்சர் சொன்ன தகவல்
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், உறுப்பினர் பூண்டி கலைவாணன் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, கருவேல மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு, 75 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதாக கூறினார். வரும் நிதியாண்டில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
Next Story