சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

x

சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர, அவதூறு அல்ல என கூறினார். சம்பவம் நடந்த போது, அதிமுக உறுப்பினராக இல்லாத புகார்தாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பாதிக்கப்படாதவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். புகார்தாரர் பாபுமுருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சபாநாயகரின் பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்