வானில் தெரிந்த பறக்கும் தட்டு.. ஏலியன்ஸா? - "செம்ம ஸ்பீடா போச்சு"

x

வானில் தெரிந்த பறக்கும் தட்டு.. ஏலியன்ஸா? - "செம்ம ஸ்பீடா போச்சு"

தர்மபுரி அருகே இரவில் பறக்கும் தட்டு பறந்ததாக, அதனை நேரில் பார்த்தவர் பதிவு செய்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தனது குடும்பத்தினருடன் பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு காரில் தருமபுரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தடங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது வடகிழக்கு பக்கத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பொருள் தங்களை நோக்கி பறந்து வருவது போல அவர் பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த மர்மப்பொருள் தங்கள் காரை நோக்கி அதிவேகமாக வருவதை பார்த்த அவர், உடனிருந்த உறவினர்களுக்கு காட்டி, தனது செல்போனில் படம் பிடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த பொருள் நூறு மீட்டர் சுற்றளவிற்கு சிவப்பு நிறத்தில் ஔிர்ந்தபடி சனிக்கோள் போன்று வட்டமான வளையத்திற்குள் தட்டு போல இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தங்கள் காருக்கு மேலே 200 மீட்டர் உயரத்தில் பறந்த அந்த மர்மப்பொருள், வடக்கு நோக்கி கடந்தபோது, அதன் விளக்குகளை அணைத்துவிட்டு கடந்து சென்றதை பாலாஜி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது பறக்கும் தட்டுதான் என்று உறுதியாக அவர் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து விண்வெளி துறையினர்தான் உறுதிபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்