"பெரியாரை ஆதரிப்பவருக்கு விருதா..? டி.எம் கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி - சர்ச்சையில் சங்கீத அகாடமி

x

பெரியாரின் கருத்துக்களை ஆதரிக்கும் கர்நாடகா இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதால், சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கப்பதாக பிரபல பெண் இசைக் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு வருடந்தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டின் சங்கீத கலாநிதி விருதுக்கு கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டை புறக்கணிப்பதாக பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களும், சகோதரிகளுமான ரஞ்சினி மற்றும் காயத்ரி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது என்றும், மறைந்த பாடகர்களான தியாகராஜா மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோர்களை டி.எம்.கிருஷ்ணா அவமதித்ததாகவும் கூறிய இருவரும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மியூசிக் அகாடமி தலைவர் முரளி, சங்கீத கலாநிதி விருதின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் என்றும், உங்கள் கடிதத்தின் வார்த்தை தொணி மிகவும் மோசமாக இருந்ததெனவும் தெரிவித்த நிலையில், கடிதத்தை தங்களுக்கு அனுப்புவதற்கு முன்னே இணையத்தில் வெளியிட்டது இதன் பின்னணி குறித்து சந்தேகிக்க தூண்டுகிறது எனவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்