நொடியில் தப்பிய உயிர்.. ஒரு நிமிடம் கண்ணை சிமிட்டி இருந்தா அவ்வளவுதான் - இதுவரை கண்டிராத காட்சி
திருவாரூர் அருகே வாய்க்காலில் கவிழ இருந்த பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநரால், பயணிகள் காயமின்றி தப்பியுள்ளனர். வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்து கீழசிங்களாந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் பக்கம் திரும்பியது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து கவிழாமல் நிற்க பயணிகளும், இருசக்கர வாகன ஓட்டியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
Next Story