36 அடிக்காக அண்ணனை 6 அடிக்கு அனுப்பிய தம்பிகள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..

x

ஆரணி அருகே நிலத்தகராறு பிரச்னையில் சொந்த அண்ணனை துரத்தித் துரத்தி தாக்கி தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் - குமாரி தம்பதிக்கு 3 மகன் உள்ளனர். தந்தைக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தில் மகன்களான பாஸ்கரன், ஜெயகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் தனி வீடுகட்டி குடும்பத்துடன் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், பாஸ்கரன் வீட்டில் அருகே உள்ள 36 அடி இடம் சம்மந்தமாக மூவருக்கு முன்விரோதம் ஏற்பட்டு, இதனால் அடிக்கடி சகோதர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மீண்டும் நிலத்தகராறு காரணமாக மூவருக்கும் தகராறு ஏற்பட்டு கைலப்பானது. ஜெய கிருஷ்ணன், வெங்கடேசன் இருவரும் தனது அண்ணன் பாஸ்கரனை விரட்டிவிரட்டி சரமரியாக கட்டையால் தாக்கி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாஸ்கரன் உயிரிழந்தார். இறந்த பாஸ்கரனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். வெங்கடேசனை கைது செய்து விசாரித்துவரும் போலீசார் தலைமறைவான மற்றொரு தம்பி ஜெயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்