மனைவியிடம் கூட சொல்லாமல் மகளிடம் சொல்லி அழுத அப்பா..மறுநாள் தூக்கத்திலிருந்து எழாத சோகம்

x

மனைவியிடம் கூட சொல்லாமல் மகளிடம் சொல்லி அழுத அப்பா..மறுநாள் தூக்கத்திலிருந்து எழாத சோகம் - `முந்தா நாள் வந்தவரால் நிகழ்ந்ததா?'

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆரணி அருகேயுள்ள ரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சேவூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட்டிப்பணத்தை கட்ட முடியாமல் போன விஜயகாந்த்தை, நிறுவன ஊழியர்கள் தாக்கியதாகவும், போலீசில் புகாரளித்து காவலர்கள் மூலம் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த விஜயகாந்த் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கந்து வட்டி தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நிறுவன ஊழியர் சேவூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, அவரது நண்பர்களான சக்தி, நந்தகோபால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்