காலை உணவில் விழுந்து கிடந்த பல்லி..13 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - தொடக்கப் பள்ளியில் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மேகலா என்பவர் உணவு வழங்கும் டெண்டர் எடுத்துள்ளார். வழக்கம் போல் காலையில் மாணவர்களுக்கு சேமியா உப்புமா வழங்கபட்டுள்ளது. 3 மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story