கண்ணிமைக்கும் நொடியில் வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 மாடுகள்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், செங்கம் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அறியாமல், கிளையூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் முருகன், தனது 10 மாடுகளை செய்யாற்றின் ஓரம் உள்ள விவசாய நிலத்தில் இரவு கட்டி வைத்துள்ளார். இந்நிலையில், கரை புரண்டு ஓடிய வெள்ள நீரில் சிக்கி 7 மாடுகள் இறந்தன. மூன்று மாடுகள் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்