தி.மலையை அதிர வைத்த மோசடி.. கண்ணீர் விட்டு கதறி அழும் மக்கள் | Tiruvannamalai
திருவண்ணாமலையில் மாதாந்திர சீட்டு நடத்தி சுமார் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை சுற்று வட்டார மக்களிடம் மகேந்திரன் என்பவர் 10 லட்சம் ரூபாய் வரை மாதாந்திர சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த ஓராண்டாக பணம் செலுத்தியவர்களிடம் முதிர்வு தொகையை தராமல் தலைமறைவானதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவரை தேடி பிடித்து கைது செய்தனர். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Next Story