பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் அமர வைக்கப்படும் தாய்மார்கள் - வைரலாகும் அவல காட்சி
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய படுக்கைகள் இல்லாததால் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் அமரும் அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 75 குழந்தைகள் இங்கு பிறக்கக்கூடிய நிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையில் உள்ள வராண்டாக்களில் பச்சிளம் குழந்தைகளுடன் கர்ப்பிணி தாய்மார்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர்... இதனால் கடும் அவதி அடைந்துள்ள இளம் தாய்மார்கள் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story