"காசு வாங்கிட்டா எந்த கொம்பனா இருந்தாலும்.." - மாஃபியாக்களிடம் போலீஸ் டீலிங்..? - அம்பலமான ஆடியோ

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மணல் மாஃபியாக்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாகக் கூறும் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர் முருகன் என்பவர் போலீசாருக்கு ஏஜெண்டாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மணல் மாஃபியாக்களிடமிருந்து போலீசார் லஞ்சம் வாங்குவதாகவும், அவ்வாறு பணம் வாங்கிவிட்டால் போலீசார் நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள் எனவும் முருகன் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்