கூட்டுக்குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்திய மக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு
கே.ஜி.கண்டிகை கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட பணியின்போது, உரிய அனுமதியின்றி, பல லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலைகள் தோண்டப்பட்டது. இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் சௌமியா ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஜே.சி.பி.எந்திரத்தை சிறை பிடித்தனர்.
Next Story