கொதிக்கும் பாய்லரில் அப்படியே விழுந்த இளைஞர்... வேலைக்கு வந்த முதல் நாளிலேயே பெரும் சோகம்

x

கொதிக்கும் பாய்லரில் அப்படியே விழுந்த இளைஞர்...ஒரு வருடம் கழித்து வேலைக்கு வந்த முதல் நாளிலேயே பெரும் சோகம்

திருவள்ளூர் அருகே தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லரில் தவறி விழுந்த இளைஞர், பலத்த காயம் அடைந்தார்.

திருவள்ளூரை அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், போளிவாக்கத்தில் உள்ள தனியார் அட்டைப்பெட்டி மற்றும் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஓராண்டாக இந்த தொழிற்சாலைக்கு வேலைக்கு வராமல் இருந்த அவர் , நேற்று மாலை வந்துள்ளார். அப்போது, ஆலையில் உள்ள கொதிக்கும் பாய்லரில் அவர் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட சீனிவாசன், தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சென்ற மணவாளன் நகர் போலீசார் விசாரித்தபோது, சீனிவான் அங்கு வேலை செய்யவில்லை என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால், அவர் எதற்காக தொழிற்சாலைக்கு வந்தார்? சம்பள பாக்கி இருந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்