ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு

x

திருவள்ளூரில் ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கடந்த இரண்டு நாட்களாக சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து, கோலடி ஏரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கியதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்