துக்க நிகழ்வுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு வீட்டு கதவை திறந்த விவசாயிக்கு பேரதிர்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே விவசாயி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கொத்தகுப்பம் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான விஜயலு, 50 ஏக்கரில் வாழை, கரும்பு சாகுபடி செய்து வருகிறார். உறவினரின் துக்க நிகழ்வுக்காக குடும்பத்துடன் கே.ஜி கண்டிகைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து விஜயலு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த கிராமம் ஆந்திரா அருகே உள்ளதால், கொள்ளையர்கள் ஆந்திராவா அல்லது தமிழ்நாடா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் பற்றாக்குறையால் முறையாக ரோந்து பணி நடப்பதில்லை எனவும், கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்