படிச்சது +2.. பார்க்கிறது டாக்டர் வேலை.. அப்போ பெஷண்ட்ஸ் கதி..திருவள்ளூரை அதிர வைத்த மருத்துவமனை

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கம் பகுதியில் எஸ்.எம்.காவிரி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு திடீர் ஆய்வை மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத்துறையினர், மருத்துவர் காளிமுத்துவின் சான்றிதழ்களை பரிசோதித்தனர். அவர் 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளது தெரியவந்தது. பிறகு செவிலியர் பாத்திமாவின் சான்றிதழ்களை பரிசோதித்தனர். அவரிடமும் முறையான சான்றிதழ்கள் இல்லை. இதனையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்