"டாக்டரா நீங்க?.. மாஸ்க்க கழட்டுங்க".. வரக்கூடாத கோலத்தில் வந்த டாக்டர்.. கொதித்த நோயாளிகள்
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர், போதையில் மருத்துவம் பார்த்ததை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு தலைமை மருத்துவமனையில், இரவு பணியில் இருந்த மருத்துவர் நல்லதம்பி, மது போதையில் தன்னிலை அறியாமல் இருந்துள்ளார். ஒரு நோயாளியின் இசிஜி பரிசோதனை முடிவை வைத்து வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து தட்டிக்கேட்டவர்களை மருத்துவர், தரக்குறைவாக ஒருமையில் பேசியதாக தெரிகிறது. கோபம் அடைந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த போது, அவர் போதையில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள், பொதுமக்களிடம் இருந்து மருத்துவர் நல்லதம்பியை மீட்டுச் சென்றனர்.
Next Story