திருத்தணி முருகன் கோயிலில் நடந்த அசம்பாவிதம்.. பகீர் சிசிடிவி
திருத்தணி முருகன் கோயிலில் நடந்த அசம்பாவிதம்.. பகீர் சிசிடிவி
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி கோயிலில், முக்கியஸ்தர்கள் செல்லும் வி.ஐ.பி பாதையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், தனது மகன் அபிஷேக் மற்றும் உறவினர் நடராஜன் ஆகியோருடன், அரசு வழங்கியதாகக் கூறப்படும் ஊனமுற்றோர் அடையாள அட்டையை காண்பித்து தரிசனத்திற்கு செல்ல முயன்றார். அப்போது, அவர்களை கோயில் ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து தகாத வார்த்தைகளில் திட்டி, கோயில் ஊழியர்கள் மூவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில், கோயில் ஊழியர் அளித்த புகாரின்பேரில், சொக்கலிங்கம், அபிஷேக் மற்றும் நடராஜன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.