நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய தூய்மை பணியாளர்- தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
திருத்தணி அரசு மருத்துவமனையில், நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் ஒருவரே குளுக்கோஸ் பாட்டில் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்களுக்கான உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு, அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர், கைதேர்ந்த செவிலியர் போல குளுக்கோஸ் பாட்டிலை ஏற்றிவிட்டு செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story