பத்திரப்பதிவில் பல கோடிகள் மோசடி? அதிர்ச்சியில் நிலம் வாங்கியவர்கள், விற்றவர்கள்
பத்திரப்பதிவில் பல கோடிகள் மோசடி? அதிர்ச்சியில் நிலம் வாங்கியவர்கள், விற்றவர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சார்பதிவாளரை கண்டித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் தாமோதரன், தனக்கு வேண்டிய முகவர்களை வைத்து பத்திரப்பதிவுக்கு வரும் விவசாயிகளையும், வீட்டு மனைப்பதிவுக்கு வரும் பொது மக்களையும் மிரட்டி
பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
பத்திரபதிவுகளுக்கு முறைகேடாகவும் ஆள்மாறாட்டம் செய்தும் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தாமோதரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகளும் பொதுமக்களும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.