டாக்டராக அவதாரம் எடுத்த ஓனர்...வெளியே MBBS போர்டு... உள்ளே சென்றால் அதிர்ச்சி
டாக்டராக அவதாரம் எடுத்த ஓனர்... வெளியே MBBS போர்டு...உள்ளே சென்றால் அதிர்ச்சி
திருப்பூர் அருகே முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்...
திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர், பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அடங்கிய குழுவினர் திருப்பூர் இடுவாய், சின்னக் காளி பாளையத்தில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்ற மருத்துவரின் பெயர் பலகை இருந்தது. ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்தக உரிமையளராக உள்ள லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. மார்சல் முகேஷ் ஆண்டனியைத் தொடர்பு கொண்ட போது அவர் அங்கு வருவதில்லை என தெரிவித்துள்ளார்... இந்நிலையில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக மார்சல் முகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மருந்தக பணியாளர் நளினி ஆகியோர் வரும் 21ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.