திடீரென நிறம் மாறும் அணை - செத்து மிதக்கும் மீன்கள்
திருமூர்த்தி அணையில் கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விடப்பட்டு மீன்கள் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மர்மமான முறையில் திருமூர்த்தி அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அணைப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு, குடிநீரும் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கன்று குட்டியின் சடலமும் கரை ஒதுங்கியுள்ள நிலையில், அதனை அகற்றுவதற்கு நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாசடைந்த சூழலால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கரை ஒதுங்கியவற்றை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன், மீன்கள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story