52 உயிர்களை காத்து ரியல் ஹீரோவான அரசு பஸ் டிரைவர்... நொடிப்பொழுதில் எடுத்த முடிவு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தபோது, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், 52 பயணிகள் உயிர் தப்பினர்.
திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து தாராபுரம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது முன்பக்க ஸ்டேரிங் அருகே திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த பேருந்து ஓட்டுனர் கணேசமூர்த்தி, சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலை ஓரம் நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 52 பேர் உடனடியாக கீழே இறங்கினர். இதைத்தொடர்ந்து தீ வேகமாக பரவியதில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
Next Story