இலவச பேருந்தில் சென்ற பெண் பயணிக்கு ரூ. 200 அபராதம் - நடந்தது என்ன..?

x

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பேருந்தில் இலவச டிக்கெட் எடுக்காததால், பெண் பயணிக்கு, இருநூறு

ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தெற்கு பாளையத்தை சேர்ந்த நந்தினி, தெற்கு பாளையம் பிரிவில் இருந்து புளியம்பட்டி செல்லக்கூடிய பெண்களுக்கான இலவச பேருந்தில் பயணித்துள்ளார். நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டும் அவர் நீண்ட நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பரிசோதகர் பேருந்தில் ஏறி டிக்கெட் கேட்டபோது டிக்கெட் இல்லாததால் 200 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர். அந்த பெண் பயணி மறுத்தும் விடாபிடியாக கேட்டதால், அபராதம் செலுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்