கண்முன்னே மோதல்.. கைகலப்பு..டென்ஷனாகி அலறவிட்ட அதிகாரிகள் - உள்ளதும் போச்சா.. அதிர்ந்த மக்கள்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நீர் நிலைகளில், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் அனுப்பட்டி குட்டையில் சிலர் வண்டல் மண் அனுமதியை பயன்படுத்தி கிராவல் மண் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கிராவல் மண் எடுத்த வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பல்லடம் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிராவல் மண் எடுத்தவர்கள், பொதுமக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுப்பட்டி குட்டையில் இருந்து ஒரு வாரத்திற்கு யாரும் மண் எடுக்க கூடாது என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்