திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தவர்கள்... ஷாக்கான போலீசார்... விசாரணையில் பகீர் தகவல்கள்

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெருமாநல்லூர் எஸ்எஸ் நகர் பகுதியில் பாலமுருகன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இம்ரான் ஹுசைன், ஹாசி முஸ்தபா கமல் மற்றும் ஜிசான் சர்தார் ஆகிய மூவரும் போலி ஆதார் அட்டையை தயாரித்து, கடந்த எட்டு ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வருவது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மேற்குவங்கம் வழியாக இந்தியாவிற்குள் அவர்கள் ஊடுருவியதும் தெரியவந்தது. இதையடுத்து,

இதுபோல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் போலி இந்திய ஆதார் கார்டை வைத்து அங்கு தங்கி இருக்கிறார்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்