இரவு முழுவதும் கொட்டிய கனமழை..வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..! மக்கள் அவதி | Tiruppur

x

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்வாயில் சென்ற மழைநீர், கழிவுநீரோடு வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்

உடுமலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கழுத்தறுத்தான் கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. வி.ஜி.ராவ் நகர் பகுதியில் பழமையான பாலம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து அங்கிருந்த வீடுகளை சூழ்ந்தது. வெள்ளநீரோடு, கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இரவு முழுவதும் போராடி வெள்ளநீரை வெளியேற்றினர். மழை வந்தாலே அச்சமாக இருப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், முதலமைச்சர் தங்களுக்கு அண்ணன் போன்றவர் என்றும் எங்களுக்காக இப்பகுதியில் பாலத்தை சரி செய்து, கால்வாயை தூர்வாரி சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்