நேரம் பார்த்து அடித்த ஆம்னி பஸ்கள்.."ஒரே நேரத்தில் போனஸ் போட்டது காரணம்"

x

நேரம் பார்த்து அடித்த ஆம்னி பஸ்கள்.."ஒரே நேரத்தில் போனஸ் போட்டது காரணம்" - சாமானியன் சொன்ன அதிர்ச்சி தகவல்

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்துநிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் தடுப்பு அமைத்து பயணிகளை வரிசையில் வர செய்தனர். டெல்டா மாவட்டங்களுக்கு போதிய பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு 500 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தது. திருச்சிக்கு அரசுக்கட்டணம் வெறும் 180 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்