"ஜிகர்தண்டாவில் இருந்த கம்பி.!" அச்சத்தில் ஆடிப்போன காஸ்டாமர்.. அடுத்த நொடியே அதிரடி காட்டிய அதிகாரி
திருப்பூரில் ஜிகர்தண்டாவில் கம்பி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி, முரளி ஆகியோர், அவிநாசி சாலையில் உள்ள கடையில் ஜிகர்தண்டா வாங்கியுள்ளனர். அப்போது ஜிகர்தண்டாவில் கம்பி இருந்ததால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் கடை ஊழியரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள் கடையில் இருந்த 50 லிட்டர் மதிப்பிலான ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அழித்தனர். சுகாதாரமாக இல்லாத காரணத்திற்காக கடை உரிமையாளருக்கு அபராதம் அடைத்தனர்.
Next Story