ஆசையாக கட்டும் வீடு.. குடியேறுவதற்குள் உயிரை பறித்த எமன் - நடுரோட்டில் துடிதுடித்து நின்ற உயிர்கள்
அவிநாசி அடுத்துள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் - லதா தம்பதியர், அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் மற்றும் தீபன்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஊத்துக்குளி அருகே கருணாம்பதி பகுதியில் சிவக்குமார் சொந்தமாக வீடு கட்டி வந்த நிலையில், தனது மனைவியுடன் அங்கு நடைபெறும் வேலைகளை பார்க்கச் சென்று அங்கேயே இரவு தங்கியுள்ளார். இன்று காலை கருணாம்பதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்றபோது, அவிநாசி - மங்கலம் பைபாஸ் சாலை அருகே, சர்வீஸ் சாலைக்கு செல்ல முற்பட்டார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவக்குமார் மற்றும் லதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது சடலங்களையும் போலீசார் கைப்பற்றி, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....