சுற்றுலா தலம், தொழிற்சாலை என பல இடங்களில் ஆய்வு - அதிரடி காட்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை குழு

x

தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் ஆய்வு குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஏலகிரி மலையில் படகு இல்லம், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் உள்ள பொது கழிவு சுத்திகரிப்பு நிலையம், திருப்பத்தூர் பேருந்து நிலையம், ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவினர் திருப்பத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்