லவ்வருடன் ஆஜரான பெண்ணால் - குவிந்த இருவேறு சமூக இளைஞர்கள் போலீஸ் தடியடி - திருப்பத்தூரில் பரபரப்பு
வாணியம்பாடி அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருதரப்பை சேர்ந்த இளைஞர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்த நர்மதா என்ற பெண் வீட்டை விட்டு வெளியேறி, தியாகு என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனிடையே நர்மதாவின் தந்தை மகளை காணவில்லை என, போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதை அறிந்த தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து தம்பதியை வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசார் அழைத்து சென்றனர். இதனையறிந்த இரு தரப்பு உறவினர்களும் இளைஞர்களும், நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால், மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாரும் அதிவிரைவுபடையினரும் சேர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த இளைஞர்களை விரட்டியடித்தனர். அப்போது, இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்ட தம்பதியினரை, போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.