வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்த கும்பல்.. பெண்களுக்கு நேர்ந்த கதி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முள்மரத்தை பிடுங்கி எரிந்ததால் பெண்கள் உட்பட 5 பேர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியில் உள்ள காடு வேலி முள்மரத்தில் தனது மாடுகளை கட்டி வைத்து வருகிறார். இந்நிலையில், அந்த பகுதியில் இருந்து மண்ணை அள்ளிய சீனிவாசன், காட்டுவேலி முள்மரத்தையும் பிடுங்கி எரிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா குடும்பத்தினர், சீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்து, பெண்கள் உட்பட 5 பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜா குடும்பத்திற்கும் சீனிவாசன் குடும்பத்திற்கும் ஏற்கனவே முன்பகை இருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story