காய்ச்சல் தானே என அலட்சியம் வேண்டாம்... 9 வயது சிறுவனை காவு வாங்கிய கொடிய நோய்.. உஷார் மக்களே

x

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் 5ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 9 வயது கவியரசு கடந்த 17ஆம் தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. தொடர்ந்து சிறுவன் கவியரசு தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் உடலைக் கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்... சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் குப்பைக் கழிவுகள் சுத்தம் செய்யப்படாததே சிறுவன் இறப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்