ஜெகன் ஆட்சியில் திருப்பதியில் என்ன நடந்தது - ஆந்திராவையே அதிரவிட்ட சம்பவம்

x

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திராவில், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக பொறுப்புக்கு வந்த அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆந்திர சி.ஐ.டி போலீசார் ​விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பாஸ்கர் சேம்பரில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தேவஸ்தான துணை கோயில்கள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த கோப்புகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவஸ்தானத்தின் அனைத்து கோப்புகளும் ஈ-ஃபைல்களாக தேவஸ்தான சர்வரில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுவதாகவும், தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்