திருப்பதி லட்டுக்கு டிமாண்ட்.. கோயில் வாசலில் தமிழக பக்தர்களே சொன்ன உண்மை

x

திருமலை கோவிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் 'சாந்தி யாகம்' நடத்தி வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மகா சாந்தி யாகம், மகா சம்ராக்ஷண யாகம் நடத்தப்படுகிறது. பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இந்த சிறப்பு யாகம் நடைபெறுகிறது. திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சியாமளா ராவ் மற்றும் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கான இந்த பிரயாச்சித்தம் செய்யப்படுகிறது. திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கோடிக்கணக்கான பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம் நடத்தப்பட்ட நிலையில், அதுகுறித்து பக்தர்கள் தெரிவித்த கருத்துக்களை காணலாம்....


Next Story

மேலும் செய்திகள்