திருப்பதி லட்டு விவகாரம் - சோழர் ஆட்சியில் இவ்ளோ கடுமையான தண்டனையா?
திருப்பதி கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் பிரசாதத்திற்கு வழங்கப்படும் பொருட்களையும் விபரிப்பதாக தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவு இயக்குநா் முனிரத்தினம் தெரிவித்திருக்கிறார்.
கி.பி 1019 ஆம் ஆண்டு முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில், பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்? பிரசாதத்தை எப்படி தயாரிக்க வேண்டும்? என்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கல்வெட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு இணங்கவில்லை என்றால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் கல்வெட்டு கோடிட்டு காட்டுவதாக முனிரத்தினம் தெரிவித்துள்ளார். பிரசாதம் தயாரிப்பது, கோயில் நிர்வாகத்தில் தவறு செய்யும் ஊழியர்களுக்கு தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். திருச்சானூரில் பத்மாவதி கோயிலில் நெய் தரத்தை சரிபார்க்காது மற்றும் கோயில் விளக்கில் நெய் மற்றும் கற்பூரத்தை சரிவர பயன்படுத்தாதது தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் பொற்காசுகள், வெள்ளி காசுகள் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர்கள் வம்சாவளியே கோயில் பணி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டிருக்கிறது எனவும் கல்வெட்டை குறிப்பிட்டு முனிரத்தினம் கூறியிருக்கிறார்.