திருப்பதி லட்டு.. பழனி பஞ்சாமிர்தம்.. "ரெண்டும் ஒரே நிறுவனம்?".. பழனி கோயில் நிர்வாகம் விளக்கம்

x

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், பஞ்சாமிர்தம் தயாரிக்க முதல் தரமான மூலப்பொருட்களையே பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வினோஜ் பி.செல்வம், செல்வகுமார் ஆகியோர், திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்யும் நிறுவனமே பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுத்தும் வகையிலும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும், உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்