அதிரடியாக குறைந்த மீன்கள் விலை...! கிலோ கணக்கில் வாங்கி செல்லும் மக்கள்..! | Cuddalore

x

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் துறைமுகத்தில், மீன் விலைகள் அதிரடியாக குறைந்ததால், பொதுமக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில், எதிர்பாராதவிதமாக பெரும்பாறை எனப்படும் மீன் வகைகள் அதிகமாக கிடைத்தன. ஒரே படகில் 150 டன் வரை கூட மீன்கள் கிடைத்தன. இதன் காரணமாக, தேவனாம்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அதிரடியாக மீன்கள் விலை குறைந்தன. வழக்கமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாக மீன்கள், இன்று 150 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டது. இதனையறிந்து, துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள், போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்